கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 27)

சூனியன் மட்டுமே இந்த அத்தியாயம் முழுவதும் விரவி உள்ளான். தன்னைப் பற்றிய பழங்கதைகளைக் கூறுகிறான்.தான் வல்லமை பொருந்தியவன் என்பதை ஒவ்வொரு வரிகளிலும் நமக்கு உணர்த்துகிறான். அவன் படைத்த கதாப்பாத்திரங்கள் ஏன்? எதற்கு? உருவாக்கப்பட்ட என்பதையும் கூறுகிறான். இதில் பல துணைக்கதாப்பாத்திரங்களும் காணப்படுகின்றன. சாகரிகாவின் உண்மைக் குணமும் அந்த இரு கதாப்பாத்திரங்களின் வழியே தெளிவாகத் தெரிகிறது. சூனியன் பிற அத்தியாயங்களை விட இதில் வீறு கொண்டு எழுகிறான். அவன் மனத்தில் உள்ளவை எல்லாம் பரவிக் கிடக்கின்றன. பாராவிற்கும் சூனியனுக்கும் ஏன் இந்தப் பகை. இந்தப் பகையானது போரில் தான் முடியும் போல. சாகரிகாவிற்கும் சூனியனுக்கும் பகை இல்லாமல் சூனியன் அவளுக்கு எதிராகப் பல கதாப்பாத்திரங்களை ஏன் உருவாக்க வேண்டும். இருவருக்கும் இடையேயான பகைக்கான காரணம் இனிவரும் அத்தியாயங்களில் காணலாம் என எண்ணுகிறேன்.

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter